ஐந்து நாட்களும் அலுவலகத்திற்கு சமுகமளிப்பது கட்டாயம் : அரச உத்தியோகத்தர்களுக்கு புதிய நடைமுறை - News View

About Us

About Us

Breaking

Thursday, August 3, 2023

ஐந்து நாட்களும் அலுவலகத்திற்கு சமுகமளிப்பது கட்டாயம் : அரச உத்தியோகத்தர்களுக்கு புதிய நடைமுறை

நாட்டிலுள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் காலையில் அலுவலகத்துக்கு சமுகமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் அந்த அதிகாரிகள் பணியிடத்தில் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எஞ்சிய மூன்று நாட்களும் களத்துக்குச் செல்வதற்கு முன், அலுவலகத்தில் அறிக்கை செய்து முறையான புறப்பாடு ஆவணத்தில் பெயரிடப்பட்ட ஒரு அதிகாரியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது அரசாங்க உத்தியோகத்தர்களின் அலுவலக நேரம் பொருந்தும் எனவும், வருகையை கைரேகை இயந்திரம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment