பதுளை போதனா வைத்தியசாலையின் பல பிரிவுகளுக்கான மின் விநியோகக் கட்டணத்தின் நிலுவையைச் செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்டிருந்த மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணமாக 70 மில்லியன் ரூபா செலுத்தப்படாததன் காரணமாக வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிப் பிரிவு, வைத்தியர்களின் தலைமையகம், தாதியர் விடுதி ஆகியவற்றுக்கான மின் இணைப்பு நேற்று (10) காலை துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றையதினம் (10) மாலை வைத்தியசாலை நிர்வாகம் 20 மில்லியன் ரூபாவை செலுத்தியது.
மீதித் தொகையான 50 மில்லியன் ரூபாவை ஒரு வாரத்துக்குள் செலுத்துவதாக எழுத்து மூலம் அறிவித்ததையடுத்து மின் விநியோகம் மீண்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment