இன்று (9) காலை பொல்கஹவெலவிலிருந்து ரத்மலானா நோக்கிச் செல்லும் மீரிகம - கிரிஉல்ல பிரதான வீதியில் வில்வத்த ரயில் குறுக்குப் பாதையில் (Raliway Crossway) கொள்கலன் லொறி ஒன்று அலுவலக ரயிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தினால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொள்கலன் லொறி ரயில் கடவைக்குள் நுழைந்தபோது, லொறியின் இயந்திரம் திடீரென நின்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது கொள்கலனின் சாரதி வாகனத்தை விட்டுச் வெளியேறியுள்ளதாகவும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீரிகம - வில்வத்த பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தையடுத்து வடக்கு மற்றும் மலையக ரயில் மார்க்கங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாற்று வீதிகளை பன்படுத்துமாறும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயிலில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் புகையிரத சிக்னல்கள், மின் கம்பங்கள், புகையிரத கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளன.
இந்த விபத்தால், ரயிலின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் பல ரயில் சேவைகள் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீரிகம வில்வத்தை ரயில் விபத்தினால் அதனை அண்மித்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதால், பயணிகள் மற்றும் சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் இருந்து பஸ்யால சந்தியிலிருந்து மீரிகம அதிவேக நெடுஞ்சாலை வரை பயணிக்கும் வாகனங்கள் பஸ்யால சந்தியில் நுழைய முடியாது நிலையில் கொழும்பு - கண்டி பாதையை பயன்படுத்த முடியும்.
இதேவேளை, திவுலப்பிட்டியிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் மீரிகம நகரிலிருந்து இடதுபுறமாகத் திரும்பி தங்கோவிட்ட மற்றும் வரக்காபொல வீதியில் நுழைந்து கொழும்பு - கண்டி பாதைக்கு பிரவேசிக்கலாம்.
மீரிகம அதிவேக வீதியில் இருந்து வௌியேறி கொழும்பு மற்றும் திவுலப்பிட்டிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஹத்தாமுல்ல சந்தியில் இடதுபுறம் திரும்பி கொழும்பு – குருநாகல் வீதி இலக்கம் 5 க்குள் பிரவேசிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment