நவகமுவவில் பெண்களுடன் காணப்பட்ட தேரர் கைது! - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 8, 2023

நவகமுவவில் பெண்களுடன் காணப்பட்ட தேரர் கைது!

நவகமுவ, பொமிரிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் விகாரையை நடத்தி வந்த பல்லேகம சுமன என்ற தேரர் இன்று செவ்வாய்க்கிழமை (08) கைது செய்யப்பட்டதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (08) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பிரதேச மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேரர் பொலிஸுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 6 ஆம் திகதி, விஹாரை ஒன்றின் பெயரில் இயங்கும் வீட்டின் அறையில் ஒரு பெண்ணையும், யுவதியையும் மிகவும் நெருக்கமாக வைத்திருந்தபோது, பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்டார்.

அதன் பின்னர், மூவர் மீதும் அங்கிருந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் பின்னர், அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment