மன்னிப்பு கோரிய ஜெரோம் பெர்ணான்டோவின் பெற்றோர் - News View

About Us

About Us

Breaking

Friday, August 18, 2023

மன்னிப்பு கோரிய ஜெரோம் பெர்ணான்டோவின் பெற்றோர்

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணான்டோவின் பெற்றோர் தனது மகனின் கருத்துக்களிற்காக மன்னிப்பு கோரியுள்ளனர்.

ஓமல்பே சோபித தேரரை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஜெரோம் பெர்ணான்டோவின் பெற்றோர் தமது மகனின் கருத்துக்களிற்காக மன்னிப்பு கோரியுள்ளனர்.

ஏனைய மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஜெரோம் பெர்ணான்டோ தெரிவிப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து அவர் சர்ச்சையில் சிக்கினார்.

இதனை தொடர்ந்து சிஐடியினர் அவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மே மாதம் 14 ஆம் திகதி ஜெரோம் பெர்ணான்டோ சிங்கப்பூருக்கு சென்றார். இதேவேளை நீதிமன்றம் அவருக்கு எதிராக பயணத்தடை விதித்துள்ளது.

No comments:

Post a Comment