மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக சோபித ராஜகருணா : மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய நீதிபதியாக சஞ்சீவ மொராயஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, August 7, 2023

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக சோபித ராஜகருணா : மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய நீதிபதியாக சஞ்சீவ மொராயஸ்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக, நீதிபதி சோபித ராஜகருணா இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அத்துடன், மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பி. சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment