ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் (Trailer/ Showcase) தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அதனை தொடர்ந்து தமன்னாவின் கலக்கல் நடனத்துடன் வெளியான காவாலயா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அதேபோல், ‘ஹூக்கும்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி ஹிட்டானது.
மூன்றாவது பாடலான ஜூஜூபி மேட்டர் பாடலும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா 28 ஆம் திகதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
ஜெயிலர் படம் வெளியாக இன்னும் 8 நாள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் அப்டேட் வெளியாகமால் இருந்தது.
அந்த வகையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment