நாட்டில் சிறந்த எதிர்கால சமூகத்தை உருவாக்குவதற்கு ஊடகங்கள் மூலம் குரோத மனப்பான்மையை சமூகமயப்படுத்துதல் தடுக்கப்படுவது அவசியமென ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றியுள்ள அமைச்சர், எமது நாட்டில் இடம்பெற்றுள்ள பெருமளவிலான சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களுக்காக அச்சு ஊடகம் பாரிய பங்களிப்பை செய்துள்ளன.
ஊடகங்கள் ஊடாக தவறான செய்திகளை பிரசுரித்தல் மற்றும் விபரீதமான விடயங்களை வெளிப்படுத்தல் மூலம் சில தீமையான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை இரகசியமல்ல.
இதுபோன்று உலகம் முழுவதிலும் முன்னெடுக்கப்படும் ஊடக பயன்பாடு தொடர்பில் என்னால் தயாரிக்கப்பட்ட ‘த நியூஸ் பேப்பர்’ திரைப்படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளதுடன் அந்த திரைப்படம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விருதுகளுக்கும் பாத்திரமாகியுள்ளது.
துரதிர்ஷ்டமாக உலகின் வரலாற்றில் முதற்தடவையாக கடந்த வருடம் மே 09 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலை காரணமாக நிறைவேற்று உறுப்பினர் ஒருவர் விடைபெற்றுச் செல்ல நேர்ந்தது. அதனையடுத்து என்னுடைய வீடு உட்பட 72 அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன.
800 மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் தாக்கப்பட்டன. அவ்வாறான சம்பவம் இடம்பெற்றபோது ஊடகங்கள் அது தொடர்பில் எவ்வாறு பங்களிப்புச் செய்தன என்பது கேள்விக்குரியதே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment