(எம்.மனோசித்ரா)
பட்டதாரிகள் 5450 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன. இதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்ட கல்வி மேம்பாட்டு திட்ட வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் உள்ளிட்ட பாடங்களுக்காக 9 மாகாணங்களிலிருந்தும் பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அத்தோடு தேசிய பாடசாலைகளுக்காகவும் ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சகல கல்வியியற் கல்லூரிகளையும் இணைத்து பல்கலைக்கழகங்களாக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் உரிய காலத்தில் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
No comments:
Post a Comment