அளுத்கம, மத்தும, அகலவத்தை ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் அத்தியாவசிய விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் எதிர்வரும் 09ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9:00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான 15 மணி நேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, போம்புவல, கட்டுக்குருந்தை, நாகொட, பயாகல, மக்கொனை, தர்காநகர், அளுத்கம, களுவாமோதர, மொரகல்ல, பிலம்னாவத்த மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
பேருவளை பி.எம். முக்தார்
No comments:
Post a Comment