புதிய இடத்தில் மஹர பள்ளிவாசலை அமைக்க மாற்றுக் காணி வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சபையில் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், மஹர சிறைச்சாலை வளாகத்தில் இருந்த பள்ளிவாசல், சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.
நூற்றாண்டு கால வரலாறு கொண்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை புதிய இடத்தில் நிர்மாணிக்க காணித் துண்டொன்றை பெற்றுத் தருமாறு பள்ளிவாசல் நிர்வாகம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றது.
இது விடயமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் மகரூப் எம்.பி. சபையில் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment