எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Monday, July 31, 2023

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

01 முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

பெற்றோல் ஒக்டேன் 92 : ரூ. 328 இலிருந்து ரூ. 20 இனால் அதிகரிப்பு
பெற்றோல் ஒக்டேன் 95 : ரூ. 365 இலிருந்து ரூ. 10 இனால் அதிகரிப்பு
ஒட்டோ டீசல் : ரூ. 308 இலிருந்து ரூ. 2 இனால் குறைப்பு
சுப்பர் டீசல் : ரூ. 346 இலிருந்து ரூ. 12 இனால் அதிகரிப்பு
மண்ணெண்ணெய் : ரூ. 236 இலிருந்து ரூ. 10 இனால் குறைப்பு

அந்த வகையில் புதிய எரிபொருட்களின் புதிய விலைகள்
பெற்றோல் ஒக்டேன் 92 : ரூ.348
பெற்றோல் ஒக்டேன் 95 : ரூ. 375
ஒட்டோ டீசல் : ரூ.306
சுப்பர் டீசல் (4 ஸ்டார் யூரோ 4) - ரூ.358
மண்ணெண்ணெய் : ரூ.226

LIOC நிறுவனமும் குறித்த விலைத் திருத்தத்தை அமுல்படுத்துவதாக வழக்கம் போன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த ஜூலை 01 முதல், பெற்றோல் 92 ரூ.328; பெற்றோல் 95 ரூ.365; டீசல் ரூ.308; சுப்பர் டீசல் ரூ.346; மண்ணெய் ரூ. 236 ஆக விலை திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 01 முதல் பெற்றோல் 92 ரூ.318; பெற்றோல் 95 ரூ.385; டீசல் ரூ.310; சுப்பர் டீசல் ரூ.330; மண்ணெய் ரூ. 245 ஆக விலை திருத்தப்பட்டது.

No comments:

Post a Comment