சிறுநீரக சத்திர கிசிச்சையின் பின் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, July 31, 2023

சிறுநீரக சத்திர கிசிச்சையின் பின் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர கிசிச்சையின் பின்னர் மூன்று வயது சிறுவன் உயிரிழந்தமைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

சிறுநீரக சத்திர கிசிச்சையின் பின் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் உடல் நேற்று (30) மாலை அடக்கம் செய்யப்பட்டதன் பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதேவேளை, முஹம்­மது ஹம்தி எனும் சிறு­வ­னுக்கு ஏற்­பட்ட நிலை தொடர்பில் விசா­ர­ணை நடத்த உத்­த­ர­வி­டப்பட்­டுள்­ள­தாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் ஜீ. விஜ­ய­சூ­ரிய தெரிவித்­துள்ள நிலையில், சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment