பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டார் தனேஸ்வரி இரவீந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 30, 2023

பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டார் தனேஸ்வரி இரவீந்திரன்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தனேஸ்வரி இரவீந்திரன் மனித வள முகாமைத்துவத்தில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இவரை பேராசிரியராக பதவி உயர்த்துவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை நேற்று சனிக்கிழமை (29) ஒப்புதல் வழங்கியது.

யாழ். பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக் கூட்டம் சனிக்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த மனித வள முகாமைத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தனேஸ்வரி இரவீந்திரனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையிலேயே சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தனேஸ்வரி இரவீந்திரன் பல்கலைக்கழக பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment