உதயநிதி ஸ்டாலினை சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 6, 2023

உதயநிதி ஸ்டாலினை சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், ஆளுநருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

தமிழக அரசியல் களத்தில் அதிக ஆற்றலும், ஆர்வமும், நம்பிக்கையும் கொண்ட இளம் அரசியல்வாதியான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார்.

இலங்கை தமிழ் நாட்டுக்கு மிக நெருக்கமான அயல் நாடாக இருப்பதால், இரு தரப்பு உறவு பல நூற்றாண்டுகளாக தொடர்வதாகவும், தமிழ் நாட்டின் ஆதரவு இலங்கை மக்களால் எப்போதும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவதாகவும் செந்தில் தொண்டமான் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment