நாட்டை கட்டியெழுப்ப வடக்கு, தெற்கு மக்கள் ஒரேமாதிரி அர்ப்பணிக்க வேண்டும் - மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Friday, July 14, 2023

நாட்டை கட்டியெழுப்ப வடக்கு, தெற்கு மக்கள் ஒரேமாதிரி அர்ப்பணிக்க வேண்டும் - மனுஷ நாணயக்கார

(எம்.ஆர்.எம்.வசீம்)

வீழ்ந்திருக்கும் நாட்டை மீட்டெடுக்க இனம், நிரம் கட்சி பேதங்கள் இல்லாமல் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்துக்கு வடக்கு மக்களும் தெற்கு மக்களும் ஒரேமாதிரி அர்ப்பணிக்க வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினால் செயற்படுத்தப்படும் ங்லோபல் பெயார் 2023 “வடக்கிற்கு வசந்தம்” யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளது. அதன் முன்னேற்பாடுகளை கண்காணிப்பதற்காக நேற்று அங்கு சென்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ங்லோபல் பெயார் முதலாவது வேலைத்திட்டமே யாழ்ப்பணத்தில் இடம்பெற இருக்கிறது. காலியில் மேற்கொண்ட பரீட்சாத்த வேலைத்திட்டம் வெற்றியடைந்ததால் அதன் முதலாவது கட்டத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்திருப்பது, இன நல்லிணக்கம் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெறும் தினங்களில் மாத்திரம் மேற்கொள்ளப்படும் விடயம் அல்ல என்பதை நடைமுறையில் காட்டுவதற்காகும்.

நாங்கள் ஒரே இனம் ஒரே தேசம் எங்களுக்கு கட்சி பேதம் மத பாகுபாடு இல்லை. நாங்கள் எல்லாேரும் ஒரே தேசத்தவர்கள். அரசாங்கம் என்ற வகையில், நாங்கள் எல்லாேரையும் ஒன்றிணைத்துக் கொண்டு செல்லும் பயணத்தில் கைகோர்த்துக் கொள்வதுடன், நாங்கள் வடக்குக்கு வந்து கேட்பது, கட்சியை மறந்துவிடுங்கள் இன மத பேதங்களை மறந்து விடுங்கள் அனைவரும் இலங்கை தேசத்தவர்கள் அனைவருக்கும் சேவையை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் அனைத்து நிறுவனங்கள், வெளிவிவகார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மத்திய வங்கி அனைத்தும் ஒன்றிணைந்து நாங்கள் யாழ்ப்பாணம் வருகிறோம்.

தொழில் அமைச்சு ஊடாக மேற்கொள்ள இருக்கும் சந்தர்ப்பம், கொழும்புக்குவந்து தீர்த்துக் கொள்ள இருக்கும் பல பிரச்சினைகளை யாழ்ப்பாணத்தில் தீர்த்துக் கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். வேறு காரியாலயங்களுக்கு சென்று தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினைகளுக்கும் நாங்கள் இன்று தீர்வு வழங்குவோம்.

எனவே இந்த வேலைத்திட்டம் தொடர்பாக நாங்கள் கிராம்கிராமமாக சென்று அறிவுறுத்தும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டோம்.

யுத்தத்துக்கு பின்னர் பூரணமான அமைச்சு யாழ்ப்பாணத்துக்கு வந்து, கிராமத்துக்கு வந்து வேலை செய்வதற்கான சந்தர்ப்பம். அதனால் இன, மத கட்சி பேதங்கள் இன்றி வீழ்ந்திருக்கும் நாட்டை அந்த இடத்தில் இருந்து மீட்டெடுக்கவே அரசாங்கம் இணைந்திருக்கிறது. அதற்கு தெற்கில் இருப்பவர்கள் மாத்திரம் கஷ்டப்பட்டு செய்ய முடியாது.

வடக்கு, தெற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கஷ்டப்பட்டே இதனை மீட்டெடுக்க வேண்டும். அதற்காகவே இந்த வேலைத்திட்டம் இன்றும், நாளையும் செயற்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு தினங்களிலும் இரவில் இசைக்களியாட்டம் இடம்பெறுகிறது. இதற்காக ஒன்றிணையுமாறு அனைவரையும் அழைக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment