கொழும்பில் LGBTQ சமூகத்தினர் பேரணி - News View

About Us

About Us

Breaking

Monday, June 5, 2023

கொழும்பில் LGBTQ சமூகத்தினர் பேரணி

இலங்கையின் LGBTIQA+ சமூகத்தினரின் சமூகம் கொழும்பு வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை (05) அணிவகுத்துச் சென்றதுடன், 'சுதந்திர அபிமான அணிவகுப்பு' எனும் கருப்பொருளில் தமது உரிமைகள் மற்றும் கரிசனைகளை வெளிப்படுத்தும் கலாசார விழாவில் பங்குகொண்டது.

பல்வேறு வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழுவினர் தாமரைத் தடாகம் சுற்றுவட்டத்தில் இருந்து அணிவகுப்பில் பங்கேற்று கிரீன் பாத் வழியாக கொள்ளுப்பிட்டி வரை சென்றனர்.

அணிவகுப்பில் பங்குபற்றியவர்கள் பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாகைகளைக் ஏந்தியவாறு சென்றனர்.

அவற்றில் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையில் கருத்து தெரிவித்ததற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்ட நடாஷா எதிரிசூரியவை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் வாசகம் உட்பட பல்வேறு வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

No comments:

Post a Comment