ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 8, 2023

ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

யாழ். நகரை அண்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்றையதினம் வியாழக்கிழமை வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் ஹெரோயின் போதைப் பொருளை ஊசி மூலம் தனது உடலில் செலுத்தியவேளை மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் போதைக்கு அடிமையானவர் எனவும், ஏற்கனவே போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறைத் தண்டனை அனுபவித்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment