வட்டியை செலுத்த மகளையே பாலியல் செயற்பாட்டிற்கு விற்ற தந்தை : முதலாளியும், மாமாவும் தலைமறைவு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 1, 2023

வட்டியை செலுத்த மகளையே பாலியல் செயற்பாட்டிற்கு விற்ற தந்தை : முதலாளியும், மாமாவும் தலைமறைவு

சூதாட்டத்தில் விளையாடுவதற்காக வட்டிக்கு பெற்ற பணத்தை ஈடுசெய்வதற்காக, தன்னுடைய மகளையே விற்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலைக்குச் செல்லும் 16 வயதான மகளே இவ்வாறு விற்கப்பட்டுள்ளார் என்று அகலவத்த பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் அறிவித்துள்ளனர். சந்தேகநபரான தந்தை, செவ்வாய்க்கிழமை (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயும் தந்தையும், தன்னுடைய வீட்டுக்குள்ளேயே பல வருடங்களாக சூதாட்டத்தை நடத்தி வந்துள்ளனர்.

இந்த சூதாட்டத்துக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியான கலவானையைச் சேர்ந்த 38 வயதானவர், அவ்வப்போது இந்த வீட்டுக்கு வந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான தந்தை, சூதாடுவதற்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியிடம் பெற்ற பணத்துக்காக தன்னுடைய மகளையே பாலியல் செயற்பாட்டுக்காக வட்டி முதலாளியிடம் அனுப்பி வைத்துள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குற்றச் செயலுக்காக தாய் எவ்விதமான அனுமதியையும் கொடுக்கவில்லை என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

கலவானை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளி, அச்சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

வட்டிக்கு பணம் கொடுக்கும் அந்த முதலாளி, சிறுமிக்கு கையடக்கத் தொலைபேசியையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த தொலைபேசி சின்னம்மாவின் கைகளுக்கு சிக்கியதை அடுத்தே இந்தக் குற்றச் செயல் அம்பலமானது.

அந்த சிறுமி, தன்னுடைய மாமாவினால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியும், மாமாவும் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment