பௌத்தத்தை அவமதித்தமைக்காக நதாஷாவை கைது செய்ய முடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரவை ஏன் கைது செய்ய முடியாது - கேள்வி எழுப்பியுள்ள சந்திரிக்கா - News View

About Us

About Us

Breaking

Thursday, June 1, 2023

பௌத்தத்தை அவமதித்தமைக்காக நதாஷாவை கைது செய்ய முடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரவை ஏன் கைது செய்ய முடியாது - கேள்வி எழுப்பியுள்ள சந்திரிக்கா

பௌத்தத்தை அவமதித்தமைக்காக நதாஷா எதிரிசூரியவை கைது செய்ய முடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரவை ஏன் கைது செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நதாஷா எதிரிசூரிய பௌத்தத்தை உள்நோக்கத்துடன் பௌத்தத்தை அவமதித்தமைக்காக கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ய முடியும் என்றால் இஸ்லாமிய மதத்தை அவமதித்த, தேவாலயங்களையும், கிறிஸ்த வவழிபாட்டு இடங்களையும், மசூதிகளையும் எரியூட்டிய ஞானசார தேரர் உட்பட ஏனைய பலரை ஏன் கைது செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம்கள் தமிழ் பிரஜைகளுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் நதாஷா எதிரிசூரியவின் வார்த்தைகளை விட தீய நோக்கம் கொண்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ஷாபிக்கு எதிராக பொய்களை தெரிவித்து நாடு முழுவதும் அதனை பரப்பி நல்ல மனிதரின் வாழ்க்கையை அழித்த அயோக்கியர்களுக்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி குற்றவாளிகளை கைது செய்து தண்டிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இன்னமும் காலம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அவர் செயற்பட்டால் அதுவே உண்மையான ஜனநாயக நாடாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பௌத்தர்களாகிய நாங்கள் பௌத்த கொள்கைகளை நேர்மையாக பின்பற்றினால் இன்றுள்ளதுபோல நாடு குழப்பத்தில் காணப்படாது எனவும் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பௌத்தம் உயர்ந்த மதிப்பை பெற வேண்டியது அவசியம் ஆனால் ஏனைய அனைத்து மதங்களும் சமமான முக்கியத்துவத்தை பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment