இடைத் தேர்தலொன்று தேவை என்கிறார் பேராயர் - News View

About Us

About Us

Breaking

Friday, June 9, 2023

இடைத் தேர்தலொன்று தேவை என்கிறார் பேராயர்

மக்கள் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்காக இடைத் தேர்தலொன்று தேவை என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

கட்டானவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்துள்ள அவர் தேசத்தை நேசிக்காத ஆட்சியாளர்கள் பதவியிலிருக்கும்போது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால் இடைத் தேர்தல் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் தாங்கள் எப்படி தப்பிப்பிழைத்து வாழ்வது என்பது குறித்து சிந்திப்பவர்கள் மூலம் உங்களிற்கு எதிர்காலம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தேர்தலிற்கு அழைப்பு விடுக்கின்றோம், இதன் மூலம் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கலாம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மக்கள் உரிமைகளை ஒடுக்குவதற்கான சட்டமூலங்கள் கொண்டுவரப்படுவதையே நாங்கள் இன்று பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment