ராஜாங்கனை சத்தா ரத்தன தேரருக்கு விளக்கமறியலில் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 21, 2023

ராஜாங்கனை சத்தா ரத்தன தேரருக்கு விளக்கமறியலில் நீடிப்பு

ராஜாங்கனை சத்தா ரத்தன தேரரை எதிர்வரும் ஜூலை 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், கைது செய்யப்பட்ட அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே 28ஆம் திகதி இரவு அநுராதபுரம், ஸ்ராவஸ்தி பிரதேசத்தில் வைத்து அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவர், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிடுவதாக, பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் செய்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment