ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி லண்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி இந்த வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயத்தின்போது அங்கு 'பெரிஸ் கிளப்' உறுப்பினர்களுடன் விசேட சந்திப் பொன்றை மேற்கொள்ளவும் ஏற்பாடாகியுள்ளது.
இலங்கையின் கடன் நெருக்கடியை நிவர்த்தி செய்தல் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குவதாக 'பெரிஸ் கிளப்' ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதிவேளை இலங்கையின் கடன் மறு சீரமைப்பு தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தின் போது பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment