அநுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக தடையுத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 8, 2023

அநுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக தடையுத்தரவு

அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் இன்று (08) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பிலேயே குறித்த தடையுத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக ஒரு சில வீதிகளில் பயணம் செய்வதை தடைவிதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி, கொட்டா வீதி, நாவல வீதி ஊடாக சரண வீதி ஊடாக தேர்தல் செயலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெலிக்கடை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment