களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியருக்கு ஜூன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறையைச் சேர்ந்த 30 வயதான கணித ஆசிரியரான சந்தேகநபர், களுத்துறையில் தம்மிடம் மேலதிக வகுப்புக்காக வந்த மாணவிகள் சிலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த மே 11ஆம் திகதி செய்யப்பட்டதோடு, தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இறுதியாக இன்றையதினம் வரை அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடரந்து சந்தேகநபர் இன்றையதினம் (09) களுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment