மானிய வட்டி வீதத்தில் கடன் : ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு உதவி - News View

About Us

About Us

Breaking

Monday, May 15, 2023

மானிய வட்டி வீதத்தில் கடன் : ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு உதவி

வேலை வாய்ப்பில்லாதுள்ள இளைஞர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு, வட்டி வீதத்துடன் கடன்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரச வங்கிகளில் கடன் பெற முடியாத விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிவாரணக் கடன் வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இளைஞர்களிடையே இதுபோன்ற ஆர்வங்களை மேலும் ஊக்குவிக்கவும், ஆர்வமுள்ளவர்கள் சொந்தமாக பண்ணை அல்லது கால்நடை வளர்ப்பை மேற்கொள்ள வசதியாகவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இதற்கமைய, இவ்வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 இளைஞர்களுக்கு, 6.5% என்ற வட்டி வீதத்தில் 10 இலட்சம் மற்றும் 20 இலட்சம் ரூபாவை வரையில் வழங்கப்படவுள்ளது. 

இதற்கேற்ப நடவடிக்கை எடுக்குமாறு அரச வங்கிகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment