கதிர்காமம், லுணுகம்வெஹர பகுதியில் சிறிய நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் 2.5 ரிக்டர் அளவில் சிறிய நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக, புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் பிரேம் தெரிவித்தார்.
நேற்று (15) இரவு 10.15 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் இதனை, அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment