அவுஸ்திரேலியாவில் வேலை : பணம் மோசடி செய்த இரு பெண்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, May 26, 2023

அவுஸ்திரேலியாவில் வேலை : பணம் மோசடி செய்த இரு பெண்கள் கைது

(எம்.ஆர்.எம்.வசீம்)

அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து பதுளை பிரதேசத்தில் இளைஞர்களிடம் பணம் பெற்றுக் கொண்ட, பதுளை தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் அவுஸ்திரரேலியாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து 18 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக 4 முறைப்பாடுகள் பணியகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

அதன் பிரகாரம் செயற்பட்ட விசாரணை அதிகாரிகள், பணியகத்தின் அனுமதிப்பத்திரம் இல்லாமல் தொழிலுக்காக ஆட்களை இணைத்துக் கொள்ளும் குற்றச்சாட்டின் பேரில் பதுளை தெமோதரயில் குறித்த பெண்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரகள் இருவரும் தற்போது பதுளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட இருக்கின்றனர்.

குறித்த சசந்தேக நபர்கள் தவிர, வெளிநாட்டு தொழில் மோசடி மற்றும் அது தொடர்பான மேலுமொரு நபர் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த நபரை கைது செய்வதற்கு தேவையான விசாரணை நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment