கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், நேற்று திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் சுப வேளையில் கடமைகளை பொறுப்பேற்றார்.
உத்தியோகபூர்வமாக சுபவேளையில் ஆவணத்தில் கையெழுத்திட்ட பின்னர் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்னாயக்கவிடம் கையளித்தார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இ.தொ.கா.வின் மூத்த தொழிற்சங்கவாதியும் கட்சியின் உபதலைவருமான ரி.வி.சென்னன், பரத் அருள்சாமி, கிழக்கு மாகாண சபையின் அரச திணைக்களங்களின் செயலாளர்கள், அரச திணைக்கள உயரதிகாரிகளென பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment