ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக வட மாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வட மாகாண ஆளுநராக புதன்கிழமை (17) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு மக்களுக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையான ஒத்துழைப்புக்களை அர்ப்பணிப்புடன் வழங்குவததாக உறுதியளித்துள்ளார்.
தாரளமான மனதுடைய ஜனாதிபதியின் கருத்துக்களை இட்டு நான் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றேன்.
வடக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளர்.
ஜனாதிபதியின் அழைப்பில் இப்பதவியை ஏற்றுக் கொண்டுள்ளேன். வடக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்காகக் கொண்டு வடக்கு மக்கள் பிரதிநிதிகளுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment