தெற்கு கடற்பரப்பில் பாரிய தொகை போதைப் பொருட்கள் மீட்பு : ஆறு சந்தேகநபர்கள் கைது : படகை கொழும்பு துறைமுகம் கொண்டு வர நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 18, 2023

தெற்கு கடற்பரப்பில் பாரிய தொகை போதைப் பொருட்கள் மீட்பு : ஆறு சந்தேகநபர்கள் கைது : படகை கொழும்பு துறைமுகம் கொண்டு வர நடவடிக்கை

தெற்கு கடற்பரப்பில் 6 சந்தேகநபர்களுடன் பெருமளவான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் இலங்கை மீன்பிடிப் படகொன்றை கைப்பற்றியுள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த புலனாய்வு நடவடிக்கையின் மூலம், இவ்வாறு பெருமளவிலான போதைப் பொருட்களையும் 06 சந்தேகநபர்களையும் ஏற்றிச் சென்ற உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகு கைது செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடலில் விஜயபாகு கப்பல் மூலம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்களுடன் போதைப் பொருள் கடத்திய கப்பலை இன்று (18) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரவுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment