கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார் அநுராதா யஹம்பத் ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 17, 2023

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார் அநுராதா யஹம்பத் !

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் அநுராதா யஹம்பத் ஆளுநர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் நேற்று (16) தனது அலுவலகப் பணிகளை முடித்துக் கொண்டு பதவியிலிருந்து வெளியேறினார்.

புறப்படுவதற்கு முன், அனைத்து ஊழியர்களிடமும் உரையாற்றிய ஆளுநர், மூன்றரை வருடங்களாக கிழக்கு மாகாணம் மீள தன்னால் இயன்றதைச் செய்ததாகக் கூறினார்.

இச்செயற்பாடு வெற்றியடைய உழைத்த கிழக்கு மாகாண சபையின் அனைத்து அதிகாரிகளுக்கும் ஆளுநர் அலுவலகத்திற்கும் நன்றி தெரிவிக்கவும் அவர் மறக்கவில்லை.

பின்னர் திணைக்கள அலுவலக அதிகாரிகள் ஆளுநருக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கினர்.

பின்னர், ஆளுநர் தனது அதிகாரப்பூர்வ காரை ஒப்படைத்துவிட்டு சொந்த காரில் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.

இதன்போது, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, முன்னாள் ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் உதித ரஸ்நாயக்க, சலுகா தினேந்திரா, மகேஷ் சதுரங்க, ருச்சிர திலான் மதுசங்க, சி. விஜேவர்தன, ஆளுநரின் உதவிச் செயலாளர் ஏ.ஜி.தேவேந்திர, கணக்காளர் ஏ.கோர்னேஷ், நிர்வாக உத்தியோகத்தர்கள், மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் திரு.சாமர நிலங்க மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment