கடலில் மூழ்கிய இரு பாடசாலை மாணவர்களின் சடலங்கள் மீட்பு : வகுப்புக்குச் செல்வதாக தெரிவித்து சென்றதாக தகவல் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 7, 2023

கடலில் மூழ்கிய இரு பாடசாலை மாணவர்களின் சடலங்கள் மீட்பு : வகுப்புக்குச் செல்வதாக தெரிவித்து சென்றதாக தகவல்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் இரு மாணவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று (06) மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு செல்வதாக கூறிச் சென்ற, இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய கறுப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் என கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித், இருதயபுரத்தைச் சேர்ந்த நிரோசன் பிரவீன்த் என சடலங்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இவர்கள் வீட்டிலிருந்து சென்று, குறித்த கடற்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த வேளையில் அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மட்டக்களப்பு திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.யூ. அப்துல் ஹக்கீம் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டு மரண விசாரணையினை மேற்கொண்டதைத் தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கல்லடி குறூப்நிருபர்)

No comments:

Post a Comment