மகனுடன் முரண்பட்ட மாணவனை இரும்பு கம்பியால் தாக்கிய ஆசிரியர் : பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Monday, May 22, 2023

மகனுடன் முரண்பட்ட மாணவனை இரும்பு கம்பியால் தாக்கிய ஆசிரியர் : பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு

வெலிகம தேசிய பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 11ஆம் ஆண்டு மாணவர் ஒருவரை இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கியதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில், காயமடைந்த மாணவன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆசிரியரின் கொடூரமான தாக்குதலால் காயமடைந்த மாணவன் நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் பெற்றோர் வெலிகம பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்ததாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியரின் மகனுடனுடன், குறித்த மாணவனுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர் (தந்தை) மணவனைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை இடைவேளை முடிந்ததும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவனின் வகுப்புக்கு வந்து, என் மகனை ஏன் அடித்தாய் எனக் கேட்டு, அம்மாணவனை வகுப்பிலிருந்து வெளியே இழுத்துச் சென்று இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.

பின்னர் மாணவனை கல்லூரி மைதானத்தை நோக்கி இழுத்துச் சென்றார். அதை பார்த்த மற்றொரு ஆசிரியர், ஆசிரியரின் பிடியில் இருந்து மாணவனை மீட்டுள்ளார்.

இத்தாக்குதல் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக வெலிகம பொலிஸார் மற்றும் பிரதேச கல்வி அலுவலகத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த (17) செய்த முறைப்பாட்டை விசாரிப்பதற்காக இரு தரப்பினரும் வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர். வெலிகம பொலிஸ் தலைமையக பரிசோதகர் டி. எம். அபேசேக்கரவின் பணிப்புரையின் பிரகாரம் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment