கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமையில் 22.05.2023 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்கரைகளையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் சுத்தம் செய்யும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைவாக வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.நவநீதனின் தலைமையில் இன்று 27.05.2023 சனிக்கிழமை காலை பாசிக்கு கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு பிரதேச சபை ஊழியர்கள், மொகிதீன் சன சமூக நிலைய பிரதிநிதிகள், கல்குடா சுற்றுலா பொலிஸ் பங்கு பற்றுதளுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது பிரதேச சபை உழவு இயந்திரத்தில் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மேலும் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு சுற்றுச்சூழலும் அழகாக்கப்பட்டது.
பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் கடலில் மற்றும் நீர் வளங்களில் கலப்பதனால் நீர் வளங்களில் வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக பொலித்தின் பிளாஸ்டிக் பொருட்களை பாவித்த பின்பு அதனை முறையாக அகற்றுவதன் மூலம் எமது இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும்.
எஸ்.ஐ.எம். நிப்ராஸ்
No comments:
Post a Comment