புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்றுமுன்தினம் 25 ஆம் திகதி இரவு துபாய் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலையம் தகவல் தெரிவிக்கிறது.
நேற்றுமுன்தினம் இரவு 8.50 மணியளவில் துபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர் புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர் ஏழரை கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கைத்தொலைபேசியுடன் சட்ட விரோதமான முறையில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தபோது கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு, 75 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமை தெரிந்த விடயமாகும்.
No comments:
Post a Comment