ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்களே தவிர அழிக்கவில்லை - பிரசன்ன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Monday, May 1, 2023

ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்களே தவிர அழிக்கவில்லை - பிரசன்ன ரணதுங்க

(இராஜதுரை ஹஷான்)

நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் எதிர்காலத்துக்காகவும் ராஜபக்ஷர்களுக்கு ஆதரவாக செயற்படுவோம். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் எந்தத் தேர்தலிலும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான எமது அணிதான் வெற்றி பெறும். ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்களே தவிர நாட்டை அழிக்கவில்லை. பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்களுக்கு என்றும் ஆதரவு வழங்குவார்கள் என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்

பொரள்ளை கெம்பல் மைதானத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பாரிய அரசியல் மற்றும் பொருளாதார பாதிப்புக்கு பின்னர் கட்சி என்ற ரீதியில் மே தினக் கூட்டத்தை தற்துணிவுடன் நடத்துவதையிட்டு பெருமையடைகிறோம்.

கட்சி என்ற ரீதியில் குறுகிய காலத்தில் பாரிய சவால்களை எதிர்கொண்டு, மக்களாதரவுடன் அந்த சவால்களை வெற்றி கொண்டுள்ளோம்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில்தான் ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டம் தோற்றம் பெற்றது. போராட்டத்தின் ஊடாக இராச்சியத்தை வீழ்த்தும் நோக்கம் மக்களுக்கு இருக்கவில்லை.

அமைதி வழிப் போராட்டத்தை மக்களால் ஆட்சிக்கு வர முடியாத அரசியல் தரப்பினர் கொள்ளையடித்தார்கள்.

காலி முகத்திடல் போராட்டத்தில் கூடாரமிட்டு இராச்சியத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் இன்று அவர்களுக்குள் முரண்பட்டுக் கொள்கிறார்கள். நாட்டு மக்கள் இன்று உண்மையை விளங்கிக் கொள்கிறார்கள்.

பெரும்பான்மையை கையில் வைத்துக் கொண்டு நாட்டுக்காக பின்வாங்கி அரசாங்கத்தை அமைக்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம். விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால்களை ஏற்பதற்கு தைரியம் இல்லை.

நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் எதிர்காலத்துக்காகவும் ராஜபக்ஷர்களுக்கு ஆதரவாக செயற்படுவோம். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் எந்தத் தேர்தலிலும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான எமது அணிதான் வெற்றி பெறும். ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்களே தவிர நாட்டை அழிக்கவில்லை. பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்களுக்கு என்றும் ஆதரவு வழங்குவார்கள் என்றார்.

No comments:

Post a Comment