ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மூன்று புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள் மூவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் இ.தொ.கா. பிரதிநிதிகளான அமைச்சர் ஜீவன் தொண்டமான், எம். ரமேஷ்வரன் எம்.பி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
புதிய ஆளுநர்கள்
திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் - வடமாகாண ஆளுநர்
செந்தில் தொண்டமான் - கிழக்கு மாகாண ஆளுநர்
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன - வடமேல் மாகாண ஆளுநர்
வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் கடந்த திங்கட்கிழமை (15) பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
அந்த வகையில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், வட மேல் மாகாண ஆளுநர் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோரே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment