கைது செய்யப்பட்டுள்ள பௌத்த மதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன : அனந்த சாகர தேரர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 30, 2023

கைது செய்யப்பட்டுள்ள பௌத்த மதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன : அனந்த சாகர தேரர்

திரைமறைவு சக்திகளின் செயற்பாடுகளால் பௌத்த மத குருவொருவர் கருத்து வெளியிட்டுள்ளார் என பகியங்கல அனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

ரஜங்கனய சத்ஹரத்ன தேரரின் சமூக ஊடக செயற்பாடுகள் குறித்து சிஐடியினரிடம் முறைப்பாடு செய்த பகியங்கல அனந்த சாகர தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ரஜங்கனய சத்ஹரத்ன தேரரை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இனங்களிற்கு இடையில் ஐக்கியமின்மையை ஏற்படுத்தும் வகையில் ரஜங்கனய சத்ஹரத்ன தேரர் சமூக ஊடகங்களில் செயற்பட்டு வந்தார் என அனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

சமீபகாலத்தில் பல தனி நபர்கள் மத நிந்தனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பல பௌத்த மத குருமாரும் உள்ளனர். இவர்கள் பௌத்த சாசனத்தையும் அவமதிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் ஒருவர் ரஜங்கனய சத்ஹரரத்ன தேரர் அவர் வெறுப்புணர்வை சமூக ஊடகங்களின் மூலம் ஆபாசமான மொழி பிரயோகத்துடன் பரப்புகின்றார் எனவும் அனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

சிரேஸ்ட மத குருமாருக்கு எதிராகவும் மகாநாயக்க தேரர்கள் பெண்கள் சிறுவர்களிற்கு எதிராகவும் இவர் வெறுப்புணர்வு கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். கொலைகள் சமூகத்தில் வன்முறைகளை தூண்டுதல் குறித்தும் அவர் கருத்து தெரிவித்து வருகின்றார் எனவும் அனந்த சாகார தேரர் தெரிவித்துள்ளார்.

மத ஐக்கியமின்மையை ஏற்படுத்துவதற்காக ஷரியா சட்டத்தை ஆதரித்துள்ள அவர் இதன் மூலம் மத ஐக்கியமின்மையை ஏற்படுத்த முயல்கின்றார். சிறுபான்மை மற்றும் மதக் குழுக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரிப்பதற்காக அவர் கருத்துக்களை வெளியிட்ட தருணங்களும் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது சமூக ஊடக நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். நாங்கள் அவரின் பிரிவின் தலைமைக்கு இது குறித்து எச்சரித்ததுடன் சமூக ஊடகங்களில் அவரின் நடவடிக்கைகளை கண்டித்த போதிலும் அவர் தனது நடவடிக்கைகளை திருத்திக் கொள்ள முயலவில்லை என தெரிவித்துள்ள அனந்த சாகர தேரர் இதன் காரணமாக அவரின் பின்னால் திரைமறைவு சக்திகள் இருந்து அவரை ஆட்டுவிக்கின்றன என நாங்கள் கருதுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அவரது வங்கிக் கணக்குகளிற்கு பல பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. எனினும் இது தொடர்பாக எவரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment