ரணிலை சவாலுக்குட்படுத்த யாருக்கும் முடியாது : பொருளாதாரம் ஸ்திரமான பின்னே தேர்தல் - வஜிர அபேவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Friday, May 19, 2023

ரணிலை சவாலுக்குட்படுத்த யாருக்கும் முடியாது : பொருளாதாரம் ஸ்திரமான பின்னே தேர்தல் - வஜிர அபேவர்த்தன

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய தலைவராக ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக நிற்பார். அவரை சவாலுக்குட்படுத்த யாருக்கும் முடியாது. அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமடையச் செய்த பின்னே தேர்தலுக்கு செல்ல முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்றாலும் ஒரு சில கட்சிகள் தங்களின் ஜனாதிபதி வேட்பாளர் இவர்தான் என தெரிவித்து, இன்பம் கண்டு வருகின்றன. அது தொடர்பில் நாங்கள் அலட்டிக் கொள்ளவில்லை.

என்றாலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தேசிய தலைவராக போட்டியிட இருக்கிறார். அதனால் ஐக்கிய தேசிய கட்சி உட்பட பல கட்சிகள் இணைந்து ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்புவதாக தெரிவித்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார்.

தற்போது அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக அவர மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் வெற்றியளித்து வருகிறது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது. அதனால் பொருட்களின் விலை குறைவடைந்து வருகிறது. அதனால் ரணில் விக்ரமசிங்க மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தேசிய தலைவராகவே போட்டியிட இருக்கிறார். ரணில் விக்ரமசிங்கவை சவாலுக்குட்படுத்த யாருக்கும் முடியாது.

அத்துடன் தற்போது வீழ்ச்சியடைந்து வரும் டொலரின் பெறுமதியை 200 ரூபா வரை வீழ்ச்சியடையச் செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

அடுத்துவரும் தமிழ், சிங்கள புத்தாண்டாகும்போது மக்கள் எதிர்பார்ப்பதைவிட பொருட்களின் விலை குறைவடைந்து பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர முடியுமாகும்.

பொருளாதாரம் ஸ்திரமான நிலைக்கு வந்த பின்னர் நாட்டில் முக்கியமான எந்த தேர்தலுக்கும் செல்ல முடியும் என்றார்.

No comments:

Post a Comment