டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை நிர்மாணத்துறையை வலுவூட்ட பயன்படுத்த வேண்டும் - நிதி இராஜாங்க அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 31, 2023

டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை நிர்மாணத்துறையை வலுவூட்ட பயன்படுத்த வேண்டும் - நிதி இராஜாங்க அமைச்சர்

(எம்.வை.எம்.சியாம்)

உலக சந்தையில் சீமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத்துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

விலை அதிகரிப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில் விலை குறைப்பு வீதம் மிகவும் மெதுவாகவே காணப்படுவதாக நிர்மாணத்துறையின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின்போது நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உலக சந்தையின் கட்டுமானப் பொருட்களின் விலை வீழ்ச்சியை அவதானித்து ஒரு மாதத்தில் கூடி உரிய விலை குறைப்பு வீதத்தை அறிவிக்க முடியும்.

கடந்த சில மாதங்களில் ரூபாயின் பெறுமதி சுமார் 20 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் கூறுகின்றன.

குறிப்பாக ரூபாவின் பெறுமதியை ஒப்பிடும்போது விநியோகத் துறைக்கான பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்து வருவதால் அவற்றின் விலையை குறைப்பது நியாயமானதா? என ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

ஏனெனில் விலை உயர்வுடன் ஒப்பிடும்போது டொலரின் அதிகரிப்பு பொருட்களின் விலை உயர்வு போல் வேகமாக இடம்பெறாது என்பதை நாம் பொதுவாக அறிவோம். எனவே பொருளாதாரத்தை மீட்டெடுக்க சட்ட வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment