தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா (69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அவர் அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று (மே 3) அவரது உயிர் பிரிந்தது.
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு பரிமாணங்களில் பயணித்த மனோபாலா 20 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார்.
200 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் டிவி சீரியலும் எடுத்துள்ளார். 3 படங்கள் தயாரித்தும் உள்ளார். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் ஆகாய கங்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சிவாஜி, ரஜினி, விஜயகாந்த், பிரபு, கார்த்தி, சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார்.
சிவாஜி, ரஜினி துவங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை பல நடிகர்களுடன் இணைந்தும் நடித்துள்ளார்.
மனோபாலாவின் மறைவு திரை ரசிகர்கள் இடையே கடும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment