இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை - விஜயதாச ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Monday, May 29, 2023

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை - விஜயதாச ராஜபக்ஷ

(எம்.ஆர்.எம்.வசீம்)

இந்திய அரசாங்கத்தினால் நட்டஈட்டுத் தொகை ஒன்றை கோரியதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவித்ததில்லை. ஆனால் நியூ டயமண்ட், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஆகிய இரண்டு கப்பல்களின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக இந்திய கடற்படைக்கு ஏற்பட்ட செலவை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறே இந்திய உயர் ஸ்தானிகர் கோரி இருந்தார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீ அணைத்தல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்டுக்கொண்டிருந்த அழிவின்போது எமது நாட்டின் கோரிக்கைக்கமைய இந்திய அரசாங்கத்தினால் கடற்படையை தந்துதவிதயதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட செலவை மீண்டும் பெற்றுக் கொள்ள மேற்கொள்ளப்படுகின்ற கோரிக்கை தொடர்பாக நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீ அணைத்தல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்டுக் கொண்டிருந்த அழிவின்போது அதனை கட்டுப்படுத்துவதற்காக எமது கடற்படையுடன் எமது கோரிக்கைக்கமைய இந்திய கடற்படையின் உதவியை வெற்றிகரமாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தோம்.

அத்துடன் இந்திய அரசாங்கத்தினால் நட்டஈட்டு தொகை ஒன்றை கோரியதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவித்ததில்லை. என்றாலும் இந்திய அரசாங்கத்தினால் கடற்படையை செலுத்தியதன் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட செலவை மீள் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உயர்ஸ்தானிகரால் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இரண்டு கடிதங்கள் ஊடாக நீதி அமைச்சர் என்ற வகையில் எனக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் அறிவுறுத்தி இருக்கிறது.

அதன் பிரகாரம் இந்திய கடற்படையை நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு ஈடுபடுத்தியதன் மூலம் ஏற்பட்ட செலவு 400 மில்லியன் இந்திய ரூபா மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு இந்திய கடற்படைக்கு ஏற்பட்ட செலவு 490 மில்லியன் இந்திய ரூபாவையும் அவர்களுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் எமக்கு அறிவித்திருக்கிறார்கள்.

அந்த இரண்டு கப்பல்கள் தொடர்பான வழக்குகள் மூலம் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு, அதனை இந்தியாவுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு ஆலாேசனை வழங்கி இருக்கிறது.

மேலும் நட்டஈட்டு தொகை ஒன்றை இலங்கை அரசாங்கத்தினால் கேட்டிருக்கவில்லை என்றும் இரண்டு கப்பல்களின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக இந்திய கடற்படைக்கு ஏற்பட்ட செலவை மீள வழங்குமாறே இந்திய உயர் ஸ்தானானிகரால் விடுத்திருந்த அறிவிப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment