இலங்கை மாணவர்களுக்கு BIMSTEC புலமைப்பரிசில்கள் : விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் 10 - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 30, 2023

இலங்கை மாணவர்களுக்கு BIMSTEC புலமைப்பரிசில்கள் : விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் 10

BIMSTEC புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டில் இந்தியாவிலுள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தில் கீழ்வரும் கற்கை நெறிகளைத் தொடர்வதற்காக இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வரலாற்று கற்கைகளில் MA மற்றும் PhD

பௌத்த கற்கைகள், தத்துவம் மற்றும் மத ஒப்பீட்டு கற்கைகளில் MA மற்றும் PhD

இந்து கற்கைகளில் (சனாதன தர்மம்) MA மற்றும் PhD

சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் கற்கைகளில் MSc மற்றும் PhD

நிலைபேண்தகு அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவத்தில் MBA

உலக இலக்கியம் (ஆங்கிலம்) MA மற்றும் PhD

இப்புலமைப்பரிசில் திட்டமானது அனுமதிக் கட்டணம், இக்கற்கை நெறிக்கான கல்விக் கட்டணம், வதிவிட செலவுகள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு ஆகியவற்றுடன் ஒரு தடவைக்கான இருவழி பயணக் கொடுப்பனவையும் உள்ளடக்கியுள்ளது.

இத்திட்டம் குறித்த மேலதிக தகவல்களை https://nalandauniv.edu.in/admissions/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும் அல்லது foreignstudents@nalandauniv.edu.in எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் பெற முடியும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் 2023 ஜூன் 10 ஆம் திகதிக்கு முன்னதாக (https://nalandauniv.edu.in/admissions/) எனும் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்கவும்.

No comments:

Post a Comment