வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை இனிப்பு வகை கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Friday, May 26, 2023

வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை இனிப்பு வகை கைப்பற்றல்

வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை இனிப்பு வகைகள் நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகை சொக்லேட், இனிப்பு வகை மற்றும் சவர்க்காரம் என்பன நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் உள்ள உள்ள வீடொன்றில் வைத்து நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

விமானப்படையின் புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து கம்பஹா நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் குறித்த வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தீர்வை செலுத்தப்படாமல் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சொக்லேட் உட்பட கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள் சந்தேக நபரினால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு நகரின் பல இடங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment