இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 16,853 ஆக உயர்ந்தது! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 14, 2023

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 16,853 ஆக உயர்ந்தது!

இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மேலும் 2 கொவிட்-19 மரணங்கள் உறுதிசெய்யப்பட்டதையடுத்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் நேற்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் 672,283 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment