ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருட பிற்பகுதியிலேயே சாத்தியம் என தான் கருதுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இடைத் தேர்தல்கள் குறித்த கருத்துக்களுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தல்களை அடுத்த வருட பிற்பகுதியிலேயே நடத்த முடியும் என கருதுவதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் அடிப்படையில் தனது முதலாவது பதவிக் காலத்தின் நான்கு வருடங்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியால் புதிய மக்கள் ஆணையை பெறுவதற்காக ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்புவிடுக்க முடியும்.
இதன் காரணமாக ஜனாதிபதியின் நான்கு வருட பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலிற்கான அழைப்பு விடுக்கப்படலாம் என்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன.
எனினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் அவரின் முடிவடையாத பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கே தற்போதைய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தான் கருதுவதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த பின்னர் அவரின் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்றவர் இராஜினாமா செய்த ஜனாதிபதியின் எஞ்சிய பதவிக் காலத்தையே பூர்த்தி செய்ய வேண்டும் அவரால் இடைக்கால தேர்தலிற்கு செல்ல முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment