ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஐ.நாவின் அமைப்புகளில் பணியாற்றுவதற்கு தலிபான் தடை விதித்துள்ளது.
தலிபான் வாய் மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா எழுத்து மூலம் இந்த உத்தரவு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் வரை ஆப்கானை சேர்ந்த தனது பெண் பணியாளர்களை வேலைக்கு சமூகமளிக்க வேண்டாம் என ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது.
இது ஆப்கானில் நலிந்த நிலையில் உள்ளவர்களை சென்றடைவதை பாதிக்கும் சமீபத்தைய அறிவிப்பு என தெரிவித்துள்ள ஐ.நாவின் பேச்சாளர் பெண் ஊழியர்கள் இல்லாமல் செயற்படுவது கடினம் எனவும் தெரிவித்துள்ளார்
தலிபானின் உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது மற்றும் வெளிப்படையாக நினைத்துப்பாக்க முடியாது என ஐ.நா பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment