(எம்.வை.எம்.சியாம்)
ருமேனியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முந்தலம் பொலிஸாரினால் கருங்கலே வீதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் பங்கதெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment