பற்றாக்குறையாகவுள்ள மருந்துகளை வழங்க WHO இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 4, 2023

பற்றாக்குறையாகவுள்ள மருந்துகளை வழங்க WHO இணக்கம்

நாட்டில் பற்றாக்குறையாகவுள்ள 37 வகையான மருந்துகளை உடனடியாக வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புக் கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, இது தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டுடன் இணைந்து இந்தக் கலந்துரையாடல், ஜெனீவாவில் நடைபெற்றதாக, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாட்டிலுள்ள மருந்துகளுக்கான பற்றாக்குறை மற்றும் சுகாதார நிலைமை தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment